September 15, 2026
தேசியம்
செய்திகள்

Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட 4 கனடியர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்

Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் இருந்து கனடா திரும்பிய 4 கனடியர்கள் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என British Colombia சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் MV Hondius என்ற உல்லாசக் கப்பலில் hanta தொற்று பரவியது.

இந்த கப்பலில் பயணித்த 130 பயணிகளில் நான்கு கனடியர்கள் அடங்குவர்.

Canary தீவுகளிலிருந்து புறப்பட்ட நான்கு கனடியர்கள் ஞாயிற்றுக்கிழமை (10) British Colombia மாகாணத்தின் Victoria-வில் தரையிறங்கினர்.

அவர்களுக்கு எந்த தொற்று அறிகுறிகள் இல்லை என British Colombia  மாகாண சுகாதார இயக்குனர் Dr. Bonnie Henry தெரிவித்தார்.

இந்த நான்கு கனடியர்களும் குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள் எனவும், இது இருமடங்காக நீடிக்கவும் வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த நான்கு பயணிகளில், 70 வயதான Yukon பிராந்தியத்தை சேர்ந்த இருவர், 70 வயதான British Colombia மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் 50 வயதான ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

MV Hondius உல்லாசக் கப்பலில் இருந்த எந்த கனடியர்களுக்கும், Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த நோயுற்ற நபர்களுடன் ‘அறியப்பட்ட நேரடித் தொடர்பு’ இருந்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

Hanta தொற்றுடன் Ontario மாகாணத்தில் மூன்றாவது நபர்?

Lankathas Pathmanathan

மேலாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்ய கனடா Post முடிவு

Lankathas Pathmanathan

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment