தேசியம்
செய்திகள்

Ontario Liberal வேட்பாளர் தெரிவு நியாயமான முறையில் நடைபெற்றது: இடைக்காலத் தலைவர்

Scarborough Southwest தொகுதி Ontario Liberal வேட்பாளர் தெரிவு நியாயமான முறையில் நடைபெற்றது என Ontario கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவித்தார்.

Scarborough Southwest தொகுதியில் உள்ள Ontario Liberal கட்சி உறுப்பினர்கள் இடைத்தேர்தலுக்காக தமது வேட்பாளரை வார விடுமுறையில் தேர்ந்தெடுத்தனர்.

இந்த வேட்பாளர் தேர்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும், ஒளிவுமறைவின்றியும் நடைபெற்றது என Ontario Liberal இடைக்காலத் தலைவர் John Fraser தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர் தேர்வு நியாயத்தன்மை குறித்து வேட்பாளர்களில் ஒருவரான Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith சந்தேகம் எழுப்பினார்.

Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள Nate Erskine-Smith, Scarborough Southwest இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற முயன்றார்.

ஆனால், சனிக்கிழமை (09) நடைபெற்ற நியமனத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் Ahsanul Hafiz-இடம் தோல்வி அடைந்த அவர், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த செயல்முறை மீது சந்தேகத்தை எழுப்பினார்.

இந்த நியமனத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகளில் சிக்கல்கள் இருந்ததாகவும், தேர்தல் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் சாத்தியக்கூறு குறித்து ஆலோசித்து வருவதாகவும் Nate Erskine-Smith கூறினார்.

ஆனாலும் வேட்பாளர் தெரிவு நியாயமான செயல்முறை நியாயமானதாக இருந்தது எனவும், இதற்கு எதிராக எவரேனும் கருத்து கூறினால், அவர்கள் “அதை நிரூபிக்க வேண்டும்” எனவும் John Fraser கூறினார்.

இந்தத் தோல்வியை அடுத்து Ontario Liberal கட்சி தலைமைப் பதவிக்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க எண்ணியுள்ளாரா என்பதை Nate Erskine-Smith தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் Scarborough Southwest தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதியை முதல்வர் Doug Ford இதுவரை அறிவிக்கவில்லை.

Scarborough Southwest தொகுதியில் இடைத் தேர்தலை அறிவிக்க அவருக்கு August மாதம் வரை கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

27 வருட நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலில் இருந்து ஓய்வு

Lankathas Pathmanathan

Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை

Lankathas Pathmanathan

Leave a Comment