தேசியம்
செய்திகள்

குழந்தை கடத்தல் வழக்கின் குற்றவாளி நாடு கடத்தப்பட கூடும்?

குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முன்னாள் வீடு விற்பனை முகவர் நாடு கடத்தப்பட கூடிய சாத்தியக் கூறு தோன்றியுள்ளது.

Brampton நகரைச் சேர்ந்த முன்னாள் வீடு விற்பனை முகவர் Manoj Govindbalunikam நாடு கடத்தப்பட கூடிய சாத்தியக் கூறு தோன்றியுள்ளது.

வடக்கு Ontario-வின் Thessalon நகரில் August 15, 2023 அன்று நடந்த ஒரு சம்பவத்தில், 14 வயதுக்குட்பட்ட ஒருவரைக் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு இந்த மாத ஆரம்பத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் Sault Ste. Marie நீதிபதி Michael N. Varpio, 18 மாத சிறை தண்டனை விதித்தார்.

இந்த சிறைத் தண்டனையை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட கூடிய சாத்தியக் கூறு தோன்றியுள்ளது.

கடந்த May மாதம் Manoj Govindbalunikam தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்தச் சம்பவம் முழுவதும் ஒரு தவறான கலாசார புரிதல் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனாலும் இந்தக் கடத்தல் ஒரு ‘கலாச்சாரத் தவறான புரிதலின்’ விளைவாக நிகழ்ந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குழந்தைகளை கடத்துபவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற தெளிவான செய்தியை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தனது தீர்ப்பு உணர்த்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

சிறைத் தண்டனையை விட குறைவான எதுவும் இந்த நோக்கத்தை நிறைவேற்றாது என நீதிபதி Michael N. Varpio தனது இறுதி முடிவில் தெரிவித்தார்

Manoj Govindbalunikam  இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க உதவும் வகையில் அவரது வழக்கறிஞர் நிபந்தனைக்குட்பட்ட விடுதலையைக் கோரி இருந்தார்.

நிபந்தனைக்குட்பட்ட விடுதலை மட்டுமே அவரது குடியேற்ற நிலையைப் பாதிக்காது எனவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 06ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment