September 9, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியான முரண்கள் உள்ளன: Mark Carney

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியான முரண்கள் உள்ளதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.

கனடாவின் இரும்பு, அலுமினியம் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகள் உட்பட, கனடாவுக்கும் அமெரிக்காவுடன் தனக்கே உரிய வர்த்தகப் முரண்கள் உள்ளன என Mark Carney வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

கனடாவின் வாகன உற்பத்தித் துறை, வனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகளும் இருதரப்பு ‘உறவுக்கு இடையூறான அம்சங்களில்’ அடங்கியுள்ளன எனவும் அவர் கூறினார்.

இரு தரப்பிலும் தீர்க்கப்பட வேண்டிய “வர்த்தக முரண்கள்” இருப்பதை Mark Carney ஒப்புக் கொண்டார்.

கனடா-அமெரிக்கா-மெக்சிகோ (CUSMA) ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் கனடிய பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

CUSMA தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுபேச்சுவார்த்தைக்கு  முன்னதாக, அமெரிக்கா சலுகைகளைக் கோரி வருவதாக செய்திகள் வெளியான சில நாட்களின் பின்னர் கனடிய பிரதமரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

வர்த்தகக் கொள்கை விடயத்தில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதியின் முதன்மை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய நாடாளுமன்ற நிதிநிலை அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment