September 8, 2026
தேசியம்
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகல்

எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகுகிறார்.

Conservative தலைவர் Pierre Poilievre-ரின் தகவல் தொடர்பு இயக்குனர் Katy Merrifield பதவி விலகுகிறார்.

செவ்வாய்க்கிழமை (07) Conservative கட்சி நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் தனது விலகலை Katy Merrifield அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தந்து இறுதி பதவி நாள் வெள்ளிக்கிழமை எனவும் அவர் மேலும் கூறினார்.

Micah Green புதிய தகவல் தொடர்பு இயக்குநராகவும், Sam Lilly புதிய ஊடகத் தொடர்பு இயக்குநராகவும் பொறுப்பேற்பார்கள் எனவும் அந்த மின்னஞ்சல் தெரிவிக்கிறது.

இந்தப் பதவி உயர்வுகள் தனது பரிந்துரையின் பேரிலானவை எனவும்  Katy Merrifield குறிப்பிட்டுள்ளார்.

Pierre Poilievre அதிகளவில் பிரதான ஊடகப் பேட்டிகளை அளிக்கத் ஆரம்பித்த நிலையில், அவரது தகவல் தொடர்பு இயக்குனராக கடந்த ஆண்டு Katy Merrifield பதவி ஏற்றார்.

Related posts

80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளது: தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

பிரதமர் சவுதி அரேபியா பயணம்?

Lankathas Pathmanathan

மீண்டும் சர்ச்சைக்குள் ஹரி ஆனந்தசங்கரி?

Lankathas Pathmanathan

Leave a Comment