தேசியம்
செய்திகள்

கனடிய – இங்கிலாந்து பிரதமர்கள் உரையாடல்

அமெரிக்காவின் உலகளாவிய வரி கட்டண அறிவிப்பால் ஏற்பட்டுள்ள சவால் குறித்து கனடிய – இங்கிலாந்து பிரதமர்கள் உரையாடினர்.
இங்கிலாந்து பிரதமர் Keir Starmer உடன் ஞாயிற்றுக்கிழமை (06) உரையாடியதை கனடிய பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள், கனடாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாட்டின் தலைவர்களும் உரையாடியதாக கனடிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
“நீண்டகால, நம்பகமான கூட்டாளிகளுடன் கூட்டாண்மை முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது” என இந்த உரையாடல் குறித்து Mark Carney கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரி கட்டண அறிவிப்புகளை அறிவித்த சில நாட்களின் பின்னர் இந்த உரையாடல் நிகழ்ந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின்  இந்த நடவடிக்கை உலகளவில் பங்குச் சந்தைகளில் பெரும்  வீழ்ச்சியை ஏற்படுத்தியது வருகிறது.

Related posts

வரவு செலவுத் திட்டம்  மீதான முதல் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி!

Lankathas Pathmanathan

சவால்களை எதிர்கொள்ளும் கனடிய வாகனத்துறை: Mark Carney

Lankathas Pathmanathan

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment