தேசியம்
செய்திகள்

யுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும்: Mark Carney

மத்திய கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் தவறினால், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்” என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump எச்சரித்துள்ளார்.

Hormuz நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு Donald Trump காலக் கெடு விதித்திருந்தார்.

45 நாள் யுத்த நிறுத்த திட்டத்தை நிராகரித்த ஈரான், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் அல்லது பொது உள்கட்டமைப்புகளை யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எந்தத்  தரப்பினரும் தாக்கக் கூடாது என கனடிய பிரதமர் Mark Carney வலியுறுத்தினார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு அளித்த ஆரம்ப ஆதரவை Mark Carney நியாயப்படுத்தினார்.

தொடரும் யுத்தத்தை நிறுத்த முயலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ‘மையத்தில்’ கனடா இல்லை என்றாலும், அவற்றில் இருந்து வெளிவரும் சில தகவல்களை அறிந்து கொள்கிறது எனவும் Mark Carney கூறினார்.

அதேவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் பொதுமக்களை பாதிக்கும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் தீவிரப்படுத்தி வருவது குறித்து ஈரானிய கனடியர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து மத்திய கிழக்கு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரையிலான உயிரிழப்புகளில் ஈரானில் 1,900-க்கும் மேற்பட்டோர், லெபனானில் 1,400 பேர், இஸ்ரேலில் 23 பேர், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் சுமார் இருபது பேர், 13 அமெரிக்கப் படை உறுப்பினர்கள், 11 இஸ்ரேலிய இராணுவத்தினர் அடங்குவர்.

Related posts

Blue Jays அணி Dodgers அணியை ஆறு ஆட்டங்களில் தோற்கடிக்கும்: Mark Carney, Doug Ford நம்பிக்கை!

Lankathas Pathmanathan

முதன்மை ஊடகவியலாளர் Lloyd Robertson காலமானார்

Lankathas Pathmanathan

NATO படையை வழி நடத்த கனடா இணக்கம்

Leave a Comment