தேசியம்
செய்திகள்

தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?

தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் எந்த நேரமும் கனடாவில் இருந்து  இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.

2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவை வந்தடைந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் நாடு கடத்தல் உத்தரவு எதிர்கொள்கிறார்.

எல்லை முகவர்கள், மத்திய காவல்துறையை மேற்பார்வையிடும் பொதுப் பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை அமைச்சு, கடந்த பதினாறு ஆண்டுகளாக இவரை நாடு கடத்த முயற்சி செய்து வருவதாக தெரியவருகிறது.

இந்த அமைச்சரவைக்கு Scarborough-Guildwood-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குகதீஸ்வரன் துரைசிங்கத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

அவரைக் கனடாவிலிருந்து வெளியேற்றுவதை நியாயப்படுத்துவதற்காக, எல்லை முகவர்கள் அவரது பயண ஆவணங்களில் வேண்டுமென்றே தவறான தரவுகளை இணைத்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

கனடா எல்லை சேவைகள் முகமையகம் April 16-ஆம் திகதி குகதீஸ்வரன் துரைசிங்கத்தை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.

Related posts

Ontarioவில் 8 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

Lankathas Pathmanathan

24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment