தேசியம்
செய்திகள்

இடைத் தேர்தல்களில் Conservative கட்சி அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களில் கவனம் செலுத்தும்: Pierre Poilievre

அடுத்த மாதம் நடைபெற உள்ள முக்கியமான மூன்று மத்திய இடைத் தேர்தலிலும் Conservative கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

வெற்றிடமாக உள்ள மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான திகதியை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (08) அறிவித்தார்.

Scarborough Southwest, Terrebonne, University-Rosedale தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் April 13-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் பல ஆர்வமுள்ள வேட்பாளர்களை கொண்டிருப்பதாக கூறும் Conservative கட்சி, அடுத்த வார ஆரம்பத்தில் தமது வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறியது.

இந்த இடைத் தேர்தல்களில் Conservative கட்சி அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களில் கவனம் செலுத்தும் என Pierre Poilievre கூறினார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான Chrystia Freeland, Bill Blair ஆகியோர் பதவி விலகிய போது, Toronto நகர தொகுதிகளாக University-Rosedale , Scarborough Southwest ஆகியன வெற்றிடமாகின.

Quebec மாகாணத்தின் Terrebonne தொகுதி தேர்தல் முடிவு கடந்த February மாதம் உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.

இந்த மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், Mark Carney தலைமையிலான Liberal கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளனர்.

இந்த இடைத்தேர்தல்களில் Mark Carney அரசாங்கம் பெரும்பான்மையைப் பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு Conservative தலைவர் Pierre Poilievre பதிலளிக்கவில்லை.

இந்தத் தொகுதிகளின் முன்கூட்டிய வாக்களிப்பு April 3 முதல் 6 வரை நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Liberal கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் 169 இடங்களை கொண்டுள்ளனர்.

இது பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான 172 இடங்களில் மூன்று இடங்கள் குறைவாகவே உள்ளன.

Conservatives 141, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என நாடாளுமன்ற ஆசன பகிர்வு தற்போது அமைகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Lankathas Pathmanathan

Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண்

Lankathas Pathmanathan

Leave a Comment