September 4, 2026
தேசியம்
செய்திகள்

தேசிய நினைவு தினம்: போர்களில் பங்கேற்று இறந்தவர்களை கௌரவிக்க நாடு முழுவதும் ஒன்று கூடிய கனடியர்கள்

போர்களில் பங்கேற்று இறந்தவர்களை கௌரவிக்க நாடு முழுவதும் கனடியர்கள் தேசிய நினைவு தினத்தில் ஒன்று கூடினர்.

தேசிய நினைவு தின நிகழ்வு நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது.

பிரதமர் Mark Carney உள்ளிட்ட பிரமுகர்கள் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தலைநகர் Ottawa-வில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் Mark Carney அவரது துணைவியாருடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சுவாச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆளுநர் நாயகம் Mary Simon இம்முறை தேசிய நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Ontario படைவீரர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய அரசின் சார்பாக தொழில்துறை அமைச்சர் Mélanie Joly மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கனடாவின் இராணுவ வரலாறு நாட்டைப் போலவே சிறப்பானது என Conservative தலைவர் Pierre Poilievre நினைவு தினம் குறித்த ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து எண்பது ஆண்டை இந்த ஆண்டு தேசிய நினைவு தினம் குறிக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து எண்பது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த போரில் பங்கேற்ற  உயிருடன் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மாத்திரமே என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு நிலவரப்படி, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 667 பெண்கள், 3,024 ஆண்கள் என 3,691 கனடிய வீரர்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மீண்டும் தேர்தலில் போட்டியிட அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு

Lankathas Pathmanathan

செவ்வாய்க்கிழமை முதல் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா!

Gaya Raja

Alberta : Wood Buffalo பிராந்திய நகராட்சியில் அவசர கால நிலை அறிவிப்பு!

Gaya Raja

Leave a Comment