September 25, 2026
தேசியம்
செய்திகள்

Quebec முழுவதும் இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை!

Quebec மாகாணம் முழுவதும் இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது.

Quebec மாகாணத்தின் சில பகுதிகளில் 35 CM வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக மாகாணம் முழுவதும் இலட்சக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

பல மரக்கிளைகள் முறிந்து மின் இணைப்பை பாதித்துள்ளதாக Hydro-Québec தெரிவிக்கிறது.

செவ்வாய்க்கிழமை (11) காலை 8 மணி நிலவரப்படி, 375,600க்கும் மேற்பட்ட Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது.

இதனால் சில பாடசாலை வாரியங்கள் செவ்வாய் விடுமுறை அறிவித்துள்ளன.

Related posts

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

2022 வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை $52.8 பில்லியன்

Leave a Comment