September 27, 2026
தேசியம்
செய்திகள்

World Series 2025: மூன்றாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

World Series 2025 தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் Los Angeles Dodgers அணி வெற்றி பெற்றது.
இம்முறை World Series தொடரில் Toronto Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன.
இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணியும், இரண்டாவது ஆட்டத்தில் Dodgers அணியும் வெற்றி பெற்றது.
மூன்றாவது ஆட்டம் திங்கட்கிழமை (27) இரவு Dodger மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 6 க்கு 5 என்ற ஓட்ட வித்தியாசத்தில் Dodgers அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2 க்கு 1 என்ற நிலையில் Dodgers அணி முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரின் நான்காவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (28) இரவு Dodger மைதானத்தில் நடைபெறுகிறது.
Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடரில் போட்டியிடுகிறது.
ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து ஜெர்மன் தலைவர்கள் மகிழ்ச்சி

Lankathas Pathmanathan

Grey Cup ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment