தேசியம்
செய்திகள்

அமெரிக்க வர்த்தக கொள்கையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது: Mark Carney

அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

ஆசிய நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை  (24) விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (23) அறிவித்த நிலையில் கனடிய பிரதமரின் கருத்து வெளியானது.

வெள்ளை மாளிகை தயாராக இருக்கும்போது, தனது  அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளனர் எனவும் Mark Carney கூறினார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட Ontario அரசாங்கத்தின் புதிய விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளும் முடிவை Donald Trump எடுத்துள்ளார்.

தென்கொரியாவில் அடுத்த வாரம் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் Mark Carney, Donald Trump ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் Donald Trump-புடன் நேரடி சந்திப்பு எதுவும் இதுவரை திட்டமிட படவில்லை என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனாலும் இரு தலைவர்களும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக Donald Trump அறிவித்த பின்னர், கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்துடன் பேசவில்லை என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Marco Rubio கூறினார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுக்களில் நாம் கட்டுப்படுத்தக் கூடியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய கனடாவின் தொழில்துறை அமைச்சர் Melanie Joly, பல விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

அமெரிக்க நிர்வாகத்தில் முடிவுகளை எடுக்கும் ஒரே நபர் ஜனாதிபதி Donald Trump மட்டுமே என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என கூறிய Melanie Joly, அவரது நிர்வாகம் எந்த வகையிலும் கணிக்க முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர பிரதமர் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் Melanie Joly வலியுறுத்தினார்.

Related posts

ஒரு நாளுக்கான அதிகூடிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட புதிய சாதனை Torontoவில் பதிவு

Gaya Raja

இலங்கையருக்கு நிதி சேகரித்த Ottawa நகர முதல்வர்!

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம்: பிரதமர்

Gaya Raja

Leave a Comment