தேசியம்
செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதித் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கான நிகழ்வில் கனடிய பிரதமர் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் Mark Carney திங்கட்கிழமை (13) எகிப்து பயணமானார்.
ஊடகங்கள் முன்பாக இந்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானபோது Mark Carney சுமார் 20 நாடுகளின் தலைவர்களுடன் அமர்ந்திருந்தார்.
ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக இந்த அமைதித் திட்டத்தை Mark Carney குறிப்பிட்டார்.
இதை சாத்தியமாக்கிய அமெரிக்க ஜனாதிபதியின் தலைமையையும், கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களையும் கனடிய பிரதமர் பாராட்டினார்.
இந்த போர் நிறுத்தத்தை நிலை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் Mark Carney ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.
காசா அமைதி உச்சிமாநாட்டிற்காக Mark Carney எகிப்துக்கு இறுதி நேரப் பயணத்தை மேற்கொண்டார்.
கனடிய பிரதமரின் இந்தப் பயணம் குறித்து முன்னதாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
எகிப்தை சென்றடைந்த Mark Carney, அங்கு ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடனும், பாலஸ்தீன ஆணையத்துடனும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடனும் சுருக்கமான சந்திப்புகளை முன்னெடுத்தார்.

Related posts

தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானதிற்காக $17.1 மில்லியனுக்கும் அதிகமான நிதி வாக்குறுதி!

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்ட ஆளுநர் நாயகத்திற்கு கடிதம்

Lankathas Pathmanathan

சட்டவிரோத மருந்துகளால் பலியாகும் முதற்குடியினர் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment