தேசியம்
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Ontario NDP கட்சியின் முன்னாள் தலைவர் Andrea Horwath போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Hamilton நகர முதல்வர் Fred Eisenberger திங்கட்கிழமை (20) அறிவித்தார்.

இந்த நிலையில் Horwath இந்த பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13 ஆண்டுகள் Ontario NDP கட்சியின் தலைமையில் இருந்த Horwath இம்முறை மாகாண தேர்தல் தோல்வியின் பின்னர் பதவி விலகினார்.

Hamilton நகரசபை தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட தயாராக இல்லை என திங்களன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Horwath கூறினார்.

மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு August மாதம் 19ஆம் திகதி நிறைவடைகிறது.

Related posts

நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் வரவு செலவு திட்டம்: NDP

Lankathas Pathmanathan

CUSMA ஒப்பந்தத்தில் எந்த ஒரு முடிவும் புதன்கிழமை எட்டப்படாது?

Lankathas Pathmanathan

இரண்டு தமிழர்கள் மீண்டும் மாகாண சபைக்கு தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment