தேசியம்
செய்திகள்

தாக்குதல் பாணி துப்பாக்கிகளை மீளப் பெறும் திட்டம் ஆரம்பம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

தாக்குதல் பாணி துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் Nova Scotia மாகாணத்தில் ஆரம்பிக்கின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இந்த அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டார்.

Nova Scotia மாகாணத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைக் கொண்ட தனிநபர்களுக்கான துப்பாக்கிகளை மீளப் பெறும் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்து வைத்துள்ளது.’

இந்த இலையுதிர்காலத்தில் இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படும் என அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், துப்பாக்கி வன்முறையை எதிர்கொள்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக, மத்திய அரசு 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல் பாணி துப்பாக்கிகளை தடை செய்துள்ளது.

எமது சமூகத்தில் இருந்து தாக்குதல் பாணி துப்பாக்கிகளை அகற்றுவது, துப்பாக்கி வன்முறையின் பேரழிவு விளைவுகளை கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக உள்ளதாக ஹரி ஆனந்தசங்கரி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

Related posts

வேலை நிறுத்தங்களின் போது மாற்றுத் தொழிலாளர்களை பயன்படுத்தும் சட்டமூலம் நிறைவேறியது

Lankathas Pathmanathan

பத்து நாள் தென்கிழக்கு ஆசியா பயணத்தில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

அரசு ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment