தேசியம்
செய்திகள்

கனடா நம்பகமான வர்த்தக பங்காளி: ஐக்கிய நாடுகள் சபையில் Mark Carney முன்மொழிவு

கனடாவை நம்பகமான வர்த்தக பங்காளியாக பிரதமர் Mark Carney ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த ஒரு உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகம் விரும்பும் பங்காளியாக கனடாவை முன்மொழிந்தார்.

அரசியல், பொருளாதார கொந்தளிப்பான காலகட்டத்தில் உலகிற்கு தேவையான வளங்கள், திறமை, புத்தி கூர்மை ஆகியவை கனடாவிடம் உள்ளது என Mark Carney கூறினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்கு முன்னதாக வெளிநாட்டு உறவுகள் சிந்தனைக் குழுவில் அவர் உரையாற்றினார்.

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதிலும், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அதன் வர்த்தக, பாதுகாப்பு கூட்டாண்மைகளை பன்முகப் படுத்துவதிலும் தனது அரசாங்கத்தின் பணிகளை பிரதமர் மேற்கோள் காட்டினார்.

இந்த வார ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது அமர்வுக்காக உலகத் தலைவர்கள் New York நகரத்திற்கு செல்வதற்கு முன்னர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுடன் கனடா இணைந்து சுதந்திர பாலஸ்தீன அரசை ஞாயிற்றுக்கிழமை அங்கீகரித்தது.

Related posts

ஆரம்பமானது அமெரிக்க அதிபரின் முதலாவது கனடிய பயணம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Ontario மாகாண பொது வைத்தியசாலையில் COVID பரவல்?

Lankathas Pathmanathan

Leave a Comment