பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
அமைச்சர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்துகிறது.
நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre செவ்வாயகிழமை (23) இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மேற்பார்வையிடும் மத்திய அரசின் துப்பாக்கிகளை மீளப் பெறும் திட்டத்தை அவர் கேள்வி எழுப்பும் ஒலிப்பதிவு வெளியான நிலையில் இந்தப் பதவி விலகல் கோரிக்கை வலுப்பெறுகிறது.
அமைச்சருக்கும் அவரது Toronto குடியிருப்பில் வசிக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான உரையாடலின் 20 நிமிட ஒலிப்பதிவை Toronto Star பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை (21) வெளியிட்டது.
இந்த ஒலிப்பதிவில் குறிப்பிட்ட திட்டத்தை அமுல்படுத்த உள்ளூர் காவல்துறைக்கு வளங்கள் இருக்குமா என்பது குறித்து அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
இந்த விடயத்தில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அடிப்படை நெறிமுறைகளை மீறியதாக Conservative கட்சி அவர் மீது குற்றம் சாட்டுகிறது.
