தேசியம்
செய்திகள்

இரண்டாவது தடுப்பூசிக்கான தகுதியை விரிவுபடுத்தும் Ontario

Ontario இரண்டாவது தடுப்பூசி பெறக்கூடியவர்களுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது.

June  23 ஆம் முதல்  Delta variant hot spot என அடையாளம் காணப்பட்ட பகுதியில் வசிக்கும் May மாதம் 30ஆம் திகதிக்குள் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசிக்கு  பதிவு செய்ய தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

ஏற்கனவே Halton, Peel, Porcupine, Toronto, Waterloo, Wellington-Dufferin-Guelph, York பிராந்தியம் ஆகியன Delta variant hot spot என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் Hamilton, Simcoe-Muskoka,  Durham பிராந்தியத்தையும் Delta variant hot spotஆக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது

12 முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியின் முன்பதிவு August மாதம்  9ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு

Lankathas Pathmanathan

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

முஸ்லிம் குடும்பம் மீதானது ஒரு பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!