தேசியம்
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் விரைவில்

Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott இந்த உறுதிமொழியை வெளியிட்டார். Ontario மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாவது  படிக்கு முன்னேறுவது குறித்து முடிவெடுப்பதற்காக மாகாணத்தின் உயர் மருத்துவரை சந்திக்க உள்ளதாக நேற்று முதல்வர்  Doug Ford தெரிவித்தார்.

Ontarioவில் இன்று வரை,  75 சதவீதம் பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 19 சதவிகிதத்தினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாவது  படிக்கு முன்னேறுவதற்கு Ontarioவில் 20 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

Leave a Comment