தேசியம்
செய்திகள்

சூடான் தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த கனடா முடிவு

சூடானில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கனடா முடிவு செய்துள்ளது.

சூடானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (23) கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கடந்த திங்கட்கிழமை (17) கனடா மூடியுள்ளது.

தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.

சூடானுக்கு பயண ஆலோசனையும் கடந்த வாரம் கனேடிய அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டது.

சூடானுக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அந்த பயண ஆலோசனை அறிவுறுத்துகிறது.

சூடானில் ஏற்கனவே உள்ள கனடியர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

Related posts

நான்கு மாகாணங்களில் அதிகரித்தது ஊதியம்!

Lankathas Pathmanathan

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

Lankathas Pathmanathan

Paris Olympics: ஆறாவது பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment