September 26, 2023
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

கனடிய மத்திய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino புதிய துப்பாக்கி சட்டத்தை திங்கட்கிழமை (30) தாக்கல் செய்வார் என நீதி அமைச்சர் David Lametti தெரிவித்தார்.

புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை  விரைவில் அரசாங்கம் முன்வைக்கும்  என நேற்று பிரதமர் Justin Trudeau தெரிவித்திருந்தார்.
Liberal அரசாங்கம்  முன்னைய காலங்களில் கனடாவின் துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது.
இதை மேலும் வலுப்படுத்த கடந்த தேர்தலில் Trudeau உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto பெரும்பாகத்தில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!

Gaya Raja

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Patrick Brown

Leave a Comment

error: Alert: Content is protected !!