தேசியம்
செய்திகள்

நகரங்கள் tariff கட்டணங்களை எதிர்கொள்ள உதவ பிரதமர் தயார்!

தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் நகரங்கள் tariff கட்டணங்களை எதிர்கொள்ள உதவ பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

நகர சபைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரின் தாக்கத்தை எதிர்கொள்ள நகரங்களுக்கு மத்திய அரசு உதவும் என அவர் தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு மத்திய அரசு உதவும் என Mark Carney கூறினார்.

இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல்களை விரைவாகக் கண்காணிக்கும் ஒரு சட்டமூலத்தை Liberal  அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

மாகாண முதல்வர்கள் கூட்டம் Saskatoon நகரில்  திங்கட்கிழமை (02)  நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியானது.

Ontario முதல்வர் Doug Ford தனது முன்னுரிமைப் பட்டியலை மத்திய அரசு பரிசீலிக்க சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகத் தலைவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan

அமெரிக்காவிலிருந்து நாடு திருப்பும் கனடியர்களின் எண்ணிக்கை மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan

சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment