Ontario மாகாணத்தின் Pickering நகரில் வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 13 வயதான ஆண் கைது செய்யப்பட்டார்.
வியாழக்கிழமை (29) பிற்பகல் ஒரு வயதான பெண்ணை அடையாளம் தெரியாத ஒரு ஆண் கத்தியால் குத்தியதில் பெண் மரணமடைந்தார்.
இதில் சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதையடுத்து, Durham பிராந்திய காவல்துறையினர் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர்.
காவல்துறையினரின் தேடுதலில் சந்தேக நபர் வியாழன் இரவு கைது செய்யப்பட்டார்.
Durham பிராந்திய காவல்துறையின் (DRPS) தலைவர் Peter Moreira, இந்த கைதை உறுதிப்படுத்தினார்.
இதில் பலியானவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே இருந்திருக்கக்கூடிய உறவு குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் Pickering நகரை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு விபரங்களை வெளியிடவும் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிகளின் கீழ் இவரது அடையாளம் வெளியிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைதையடுத்து, Durham பிராந்திய காவல்துறையினர் விடுத்திருந்த அவசர எச்சரிக்கை விலக்கப்பட்டது.
