Ontario 8 மாதங்களில் முதல் முறையாக 500க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தது.
செவ்வாய்க்கிழமை 469 தொற்றுக்களையும் 18 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Ontarioவின் தினசரி தொற்றின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவாக இருந்த தொடர்ச்சியான ஒன்பதாவது நாளாக இது அமைந்துள்ளது. தொற்றின் ஏழு நாள் சராசரியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் 1,029 ஆக இருந்த ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை இப்போது 679 ஆக உள்ளது,
அதேவேளை மொத்தத்தில், 10.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
Albertaவில் March மாத ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகின.