தேசியம்
செய்திகள்

முஸ்லீம் குடும்பத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்? – நால்வர் பலி!

London Ontarioவில் முஸ்லீம் குடும்பத்தினர் மீது வாகன சாரதி ஒருவர் வேண்டுமென்றே மோதியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

வாகனத்தால் மோதப்பட்ட குடும்பத்தினர்  மதம் காரணமாக குறி வைக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். ஐந்து பாதசாரிகள் மீது அவர்களது இஸ்லாமிய மத நம்பிக்கை காரணமாக சந்தேக நபர் தனது வாகனத்தால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது  

இந்தச் சம்பவத்தில் Londonனை சேர்ந்த 20 வயதான Nathaniel Veltman என்பவர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் வெறுப்புணர்வை கொண்ட முன்கூட்டியே திட்டமிட்டது என்பதற்கான சான்றுகள் இருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒன்பது வயது சிறுவன் மருத்துவமனையில் உயிர் ஆபத்தற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடிய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், London நகர முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும்  தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கனேடிய முஸ்லிம்களின் தேசிய சபை இதை  ஒரு பயங்கரவாத தாக்குதல் என தனது அறிக்கையில் கூறியது.

Related posts

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆராய மாகாணங்களுக்கு உரிமை உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!