September 30, 2026
தேசியம்
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் மூன்றாவது தமிழர்!

Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மூன்றாவது தமிழர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் ஒன்றை  வியாழக்கிழமை (22) அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை தமிழரான சியான் சின்னராஜா தேசியத்திடம் வெள்ளிக்கிழமை (23)  வெளிப்படுத்தினார்.

Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் June 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது.

September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

Ontario தேர்தலுக்கு $189 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment