தேசியம்
செய்திகள்

Liberal அமைச்சரவையில் Elizabeth May?

புதிய Liberal அரசாங்கத்தில் அமைச்சு பதவியை எற்பதில் பசுமை கட்சி இணைத் தலைவர் Elizabeth May ஆர்வம் வெளியிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக Elizabeth May உள்ளார்.

Liberal அரசாங்கம் சிறுபான்மை அரசமைத்துள்ள நிலையில் ஏனைய கட்சிகள் ஆதரவு முதல்வர் Mark Carney-க்கு அவசியமாகிறது.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் அமைச்சு பதவி ஏற்பது குறித்து Elizabeth May-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Mark Carney அமைச்சரவையில் இணைவதை “மிகவும் கற்பனையான” சாத்தியக்கூறு எனத் தெரிவித்த அவர், அதற்கான சாத்தியம் தோன்றினால் அதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

ஆனாலும் அமைச்சரவையில் ஒரு பதவிக்காக பசுமை கட்சியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்ற எச்சரிக்கையையும் அவர் முன்வைத்தார் .

Mark Carney அமைச்சரவையில் இணைவது பசுமை கட்சி உறுப்பினராகவே இருக்கும் என Elizabeth May கூறினார் .

அதேவேளை புதிய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சபாநாயகர் பதவிக்காக தேர்தலில் Elizabeth May பல முறை போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

$3.5 மில்லியன் மதிப்புள்ள போலிக் கால்பந்து சீருடைகள் பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment