தேசியம்
செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்றாவது Liberal வேட்பாளர்

Liberal கட்சி மற்றுமொரு வேட்பாளரை தேர்தல் போட்டியில் இருந்து நீக்கியுள்ளது.
Edmonton Gateway தொகுதியில் Liberal கட்சி சார்பில் போட்டியிட்ட Rod Loyola போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
NATO எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் Hezbollah Hamas அமைப்புகளை அவர் புகழ்ந்து பேசுவதாகத் தோன்றும் 2009 ஆம் ஆண்டின் காணொளி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை வேட்பாளராக நீக்குவதற்கான முடிவுக்கு கட்சி வந்துள்ளது.
இந்த இரண்டு அமைப்புகளுமே கனடாவில் பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை வெள்ளிக்கிழமை (04) கட்சி உறுதிப்படுத்தியது.
ஆனாலும் இவர் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்து கட்சி காரணம் எதையும் குறிப்பிடவில்லை.
இவர் இம்முறை Liberal கட்சியினால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்றாவது வேட்பாளராவார்.
ஏற்கனவே Liberal கட்சியின் Calgary-Confederation வேட்பாளர் Thomas Keeper, Markham-Unionville வேட்பாளர் Paul Chiang ஆகியோர் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு திங்கட்கிழமையுடன் (07)  முடிவடைகிறது.
கனடிய தேர்தல் திணைக்கள விதிகளின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குச் சீட்டில் ஒரு வேட்பாளரின் பெயர் இடம்பெற அவரை ஒரு வேட்பாளராக April  7 ஆம் திகதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பொதுத் தேர்தல் வாக்களிப்பு April 28 ஆம் திகதி நடைபெறுகிறது.

Related posts

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja

ஈரானின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – கனேடிய அரசின் தடயவியல் அறிக்கை!

Gaya Raja

Leave a Comment