September 30, 2026
தேசியம்
செய்திகள்

விலக்கப்பட்ட Conservative வேட்பாளர்!

Windsor-Tecumseh-Lakeshore தொகுதியின் Conservative வேட்பாளர் Mark McKenzie கட்சியினால் விலக்கப்பட்டார்.

இந்தத் தகவலை Conservative கட்சியின் பிரச்சார செய்தித் தொடர்பாளர்  செவ்வாய்க்கிழமை  (01) உறுதிப்படுத்தினார்.

முன்னாள் பிரதமர் Justin Trudeau-வுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒரு காலத்தில் இவர் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கட்சியின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Windsor நகரசபை உறுப்பினரான Mark McKenzie, Windsor-Tecumseh-Lakeshore தொகுதியின் Conservative வேட்பாளராக  போட்டியிட இருந்தார்.

2022 ஆம் ஆண்டில், “Mark and Chris Podcast” நிகழ்ச்சியில்  அவர் சர்ச்சைக்குரிய இந்த கருத்துகளை தெரிவித்திருந்தார்.

கடந்த வார இறுதியில், அவர் Conservative கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான தனது பிரச்சாரத்தை Mark McKenzie அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan

2026 Paralympic: எட்டு பதக்கத்துடன் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment