தேசியம்
செய்திகள்

தேர்தலில் இருந்து விலகும் முடிவை எடுத்த Paul Chiang

தேர்தலில் இருந்து விலகும் முடிவை Markham-Unionville தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் Paul Chiang எடுத்துள்ளார்.

Conservative கட்சி வேட்பாளர் Joe Tay, Toronto-வில் உள்ள சீன தூதரகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அண்மையில் Paul Chiang பரிந்துரைத்திருந்தார்.

January மாதம், சீன மொழி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

“Paul Chiang முன்வைத்த கருத்துக்கள் என்னை மிரட்டும் நோக்கில் உள்ளன” என இந்த விடயம் குறித்து Joe Tay தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்காக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.

இந்த நிலையில் Markham-Unionville தொகுதியின்  வேட்பாளராக தொடர்ந்து இருக்கப் போவதில்லை என திங்கட்கிழமை (31) ஒரு அறிக்கையில் Paul Chiang தெரிவித்தார்.

Paul Chiang முன்வைத்த கருத்துக்கள் அவதூறானவை என Liberal தலைவர் Mark Carney தெரிவித்திருந்தார்.

இந்தத் தொகுதிக்கு புதிய வேட்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் Mark Carney செவ்வாய்கிழமை (01)கூறினார்.

Joe Tay தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு Hong Kong காவல்துறை கடந்த ஆண்டு 1 மில்லியன் Hong Kong டாலர் வெகுமதி அறிவித்தது.

December மாதம் 2024 ஆம் ஆண்டில் முதன் முதலில் வெளியான இந்த வெகுமதி அறிவித்தல் குறித்து கனடாவில் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

ஜனநாயக ஆர்வலரான Joe Tay, Hong Kong-கின் உரிமை மீறல்களை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

Don Valley வடக்கு தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

இரசாயன ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

Gaya Raja

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் மரணம் – ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment