September 30, 2026
தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இதுவரை நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது.

கனடியர்கள் April 28 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23)  வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் Liberal, Conservative கட்சிகளின் சார்பில் தலா இரண்டு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

Liberal கட்சிகளின் சார்பில் Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலின் பின்னர் நடைபெற்ற மாவட்ட மீள் பங்கீட்டின் பின்னர் இவர்கள் இருவரின் தொகுதிகளும் புதிதாக பெயரிடப்பட்டுள்ளன.

ஹரி ஆனந்தசங்கரி, 2015-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அனிதா ஆனந்த், 2021-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Conservative கட்சிகளின் சார்பில் இம்முறை இரண்டு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

Markham Stouffville தொகுதியின் நிரான் ஜெயநேசன், Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் Conservative கட்சி  வேட்பாளராக இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

இவர்கள் இருவரும் பொதுத் தேர்தல் அரசியலை எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Related posts

தாக்குதல் பாணி துப்பாக்கிகளை மீளப் பெறும் திட்டம் ஆரம்பம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

வடமேற்கு B.C. முதற்குடியினர் பிரதேசத்திலிருந்து ஐந்து பேர் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment