September 30, 2026
தேசியம்
செய்திகள்

நம்பகமான ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயல்கிறோம்: Mark Carney

நம்பகமான ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த கனடா முயன்று வருவதாக பிரதமர் Mark Carney கூறினார்.

கனடாவின் 24-வது பிரதமராக வெள்ளிக்கிழமை (14) பதவியேற்ற  Mark Carney, தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டுசெவ்வாய்கிழமை (18)  நாடு திரும்பினார்.

ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்த இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமானார்.

இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் அவர் மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கனடாவுக்கான இங்கிலாந்தின் ஆதரவின் சமிக்ஞையாக நோக்கப்படுகிறது.

பிரான்சின் ஜனாதிபதி Emmanuel Macron இங்கிலாந்தின் பிரதமர் Keir Starmer ஆகியோரையும்  பிரதமராக பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணத்தில் Mark Carney சந்தித்துள்ளார்.

கனடா பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உறவுகளை அதிகரிக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவுடன் சாதகமான உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பயணத்தின் போது Mark Carney கூறினார்.

அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump-புடன் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில் கனடாவுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளின் அசைக்க முடியாத ஆதரவின் அறிகுறியாக இந்தப் பயணம் நோக்கப்படுகிறது.

புதிய கனடிய பிரதமர் இங்கிலாந்திற்கு விஜயம் செய்யும் போது அவரை சந்திப்பதற்கு இங்கிலாந்து மன்னரிடம் ஒரு தீர்க்கமான உறுதிப்பாடு இருந்ததாக அரண்மனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து மன்னர் கவலை கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் செய்தி ஊடகங்கள் கடந்த வார இறுதியில் தெரிவித்தன.

மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றும் தனது எண்ணத்தை Donald Trump பலமுறை முன்மொழிந்தார்.

மன்னர் சார்லஸ் நாட்டின் தலைவராக உள்ள கனடாவின் மீது கடுமையான வரிகளையும் அவர் விதித்து வருகிறார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-ம்பை சந்திக்கும் திட்டங்கள் எதுவும் உடனடியாக இல்லை என தெரிவித்திருந்தார்.

கனடாவின் புதிய தலைவர் அமெரிக்க தலைவரையும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கனடிய தலைவரையும் சந்திப்பது வழமையாகும்.

மாறாக “கனடிய இறையாண்மைக்கு தகுந்த மரியாதை” செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு Mark Carney பதவியேற்ற பின்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் மத்திய வங்கியில் Mark Carney ஏழு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், மன்னர் சார்லசுடன் நெருக்கமான உறவை உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காவல்துறை அதிகாரி பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

புதிய Liberal தலைவர் Mark Carney – பிரதமர் Justin Trudeau சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment