தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் பதவி விலகினார்

கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலகினார்.

செவ்வாய்கிழமை (26) பிற்பகல் நாடாளுமன்றத்தில்  அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவை Anthony Rota அறிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கடந்த வெள்ளிக்கிழமை (22) கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

இந்த உரையின் போது  Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

இதன் பின்னணியில் சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்தன.

இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என Anthony Rota  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திங்கட்கிழமை (25) மன்னிப்பு கோரினார்.

இந்த விடயம் குறித்து உரையாட சபாநாயகர் Anthony Rota செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் பதவி விலகல் அறிவித்தல் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தனது பதவி விலகல் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என Anthony Rota தெரிவித்தார்.

அவருக்குப் பதிலாக புதிய சபாநாயகரை அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யவுள்ளனர்.

Related posts

இலையுதிர் காலஇறுதிக்குள் மீண்டும் நாடாளுமன்றம் கூடும்: பிரதமர் Trudeau !

Gaya Raja

அடுத்த வாரம் வெளியாகும் Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்கள்!

Gaya Raja

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment