தேசியம்
செய்திகள்

புதிய பிரதமராக Mark Carney வெள்ளி பதவியேற்பு

Mark Carney வெள்ளிக்கிழமை (14) கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கிறார்.

Liberal கட்சியின் தலைவராக Mark Carney கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவானார்.

இந்த நிலையில் அவர், பிரதமர் பதவியை வெள்ளிக்கிழமை ஏற்கவுள்ளார்.

கனடாவின் 24 ஆவது பிரதமராக பதவியேற்கும் Mark Carney சிறிய அமைச்சரவையை தெரிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று 15 முதல் 20 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களும் Liberal கட்சியின் தலைமைப் போட்டியாளர்களுமான Chrystia Freeland, Karina Gould ஆகியோர் புதிய அமைச்சரவையில் பங்கேற்பார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் வெளியுறவு அமைச்சர் Mélanie Joly, நிதி அமைச்சர் Dominic LeBlanc உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவியேற்பு வைபவம் வெள்ளி காலை 11 மணியளவில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில், அவரது உத்தியோகபூர்வ வாசல் தலமான Rideau Hall இல் நடைபெறும்.

முன்னதாக வெள்ளி காலை பிரதமர் Justin Trudeau ஆளுநர் நாயகத்தை சந்தித்து தனது பதவியில் இருந்து விலகுவார்.

அதன் பின்னரே புதிய பிரதமராக Mark Carney பதவியேற்பார்.

தற்போது அமைச்சரவையில் 37 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

இதில் பிரதமர் உட்பட எட்டு அமைச்சர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

புதிதாக பதவியேற்கும் Mark Carneyயும் அவரது அமைச்சரவையும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் March 24 அன்று மீண்டும் கூடுவதற்கு முன்னதாக ஒரு தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்ட முன்னாள் கனடிய அரசியல்வாதி?

Lankathas Pathmanathan

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

Gaya Raja

Leave a Comment