தேசியம்
செய்திகள்

Donald Trumpபை கையாளும் கனடாவின் அனுபவங்களில் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக்கொள்ள முடியும்: Mélanie Joly

அமெரிக்க ஜனாதிபதியுடனான கனடாவின் தொடர்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளன என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ,கனடிய பொருட்களுக்கு வரி விதிப்பதாக விடுத்த அச்சுறுத்தலை நடைமுறைப்படுத்தினால் கனடா பதிலடி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக Mélanie Joly தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், வர்த்தகம் குறித்த குழு விவாதத்தின் போது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த கருத்து அமெரிக்காவில் குடியரசுக் கட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், கனடாவில் Liberal கட்சிக்கு அண்மையில் ஆதரவு அதிகரித்திருப்பதற்கும் காரணமாக அமைந்தது.

Donald Trumpபை கையாளும் கனடாவின் அனுபவங்களில் இருந்து ஐரோப்பிய தலைவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என இந்தக் குழு விவாதத்தின் போது Mélanie Joly கூறினார்.

வரி விதிப்பது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ஆரம்ப அச்சுறுத்தல்களுக்கு கனடிய பிரதமர் Justin Trudeauவின் பதில் நடவடிக்கை இதுவரை காலத்திலும் நிகழாத ஒரு “பெரிய மாற்றம்” எனவும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Haiti நெருக்கடி குறித்து பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

ரஷ்யா, சீனா குறித்து NATO தலைவர் கனடாவை எச்சரித்தார்

Lankathas Pathmanathan

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

Gaya Raja

Leave a Comment