September 11, 2026
தேசியம்
செய்திகள்

Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் Mark Carney

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதாக Mark Carney அறிவித்தார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் Mark Carney தனது பெயரையும் இணைத்துள்ளார்.

முன்னாள் கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்தின் மத்திய வங்கியின் ஆளுநராக இவர், வியாழக்கிழமை (16 ) Edmonton நகரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரிவினைவாத விவாதத்திலிருந்து மீண்டு வருவதற்கு பொது வாக்கெடுப்பு அவசியம்: Danielle Smith

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் மிகப்பெரிய வருடாந்த வீழ்ச்சியை எதிர்கொண்டது!

Gaya Raja

Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment