தேசியம்
செய்திகள்

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

கடுமையான சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தை விரைவாக எட்ட வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.

கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கு நேற்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்ததாக பிரதமர் கூறினார்.

ஆனால் பொது சேவை கூட்டணி அதற்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை என Justin Trudeau தெரிவித்தார்.

கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற உரிமை உள்ளது எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

Related posts

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Lankathas Pathmanathan

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment