September 29, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமர் Trudeau – முதல்வர் Ford சந்திப்பு

சுகாதாரப் பாதுகாப்பை முதன்மையானதாக கொண்ட சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை (30) பிரதமர் Justin Trudeauவும் Ontario முதல்வர் Doug Fordஉம் நடத்தினர்.

பிரதமர் Trudeau, Ontario முதல்வர் Ford ஆகியோருக்கு இடையில் Ontario சட்டமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

பிரதமருடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக முதல்வர் கூறினார்.

Trudeauவுடனான சந்திப்பில் வீட்டு வசதி திட்டங்கள், குடியேற்றம், உள்கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக Ford கூறினார்.

அதேவேளை பிரதமர் Justin Trudeau 17 ஆயிரம் புதிய வீடுகளுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளை உருவாக்க 2 பில்லியன் டொலர் மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கான நிதியுதவியும் அடங்குகிறது.

Related posts

கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த அமெரிக்கா முடிவு !

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் குளிர்கால எச்சரிக்கை அமுலில் உள்ளது!

Lankathas Pathmanathan

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment