Toronto பெரும்பாகத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் நகைக் கடைகள் கொள்ளை சம்பவங்கள் குறித்த சமூக கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.
இந்தக் கூட்டம் December 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அண்மைக் காலத்தில் தமிழர்களின் நகைக் கடைகளில் நிகழும் கொள்ளைச் சம்பவங்கள், அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இதில் காவல்துறையினர், நகரசபை உறுப்பினர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.