தேசியம்
செய்திகள்

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கனடியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் ஒரு சதவீத வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை – 29 – இந்த தகவலை வெளியிட்டது.

அதிக குடும்ப, அரசாங்க செலவினங்களால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது.

இது கனடிய மத்திய வங்கியின் காலாண்டு திட்டமான 1.5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

இந்த வளர்ச்சி குறைந்த வணிக முதலீடு, ஏற்றுமதியால் ஈடுசெய்யப்பட்டது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

அதேவேளை இரண்டாம் காலாண்டு வளர்ச்சியை 2.1 சதவீதத்தில் இருந்து 2.2 சதவீதமாக புள்ளிவிவரத் திணைக்களம் மாற்றியது.

Related posts

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் : சிவகுமார் ராமசாமி

Gaya Raja

தொற்றின் ஆரம்ப நாட்களில் Quebec மாகாணத்தில் பதில் நடவடிக்கை தடைபட்டது!

Gaya Raja

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Leave a Comment