தேசியம்
செய்திகள்

30 ஆண்டுகளின் பின்னர் கனடிய அணி Stanley கோப்பையை வெற்றி பெறுமா?

கனடிய hockey அணி ஒன்று Stanley கோப்பையை வெற்றி பெறும் முயற்சியில் இறங்குகிறது.

Edmonton Oilers அணி சனிக்கிழமை (08) ஆரம்பிக்கும் Stanley Cup இறுதி சுற்றில் Florida Panthers அணியை எதிர்கொள்கிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை வெற்றி பெறும்.

இந்தத் தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் 30 ஆண்டுகளில் Stanley Cup வென்ற முதலாவது கனடிய அணியாக Oilers அணி மாறும்.

NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் Oilers அணி மாத்திரம் இந்த தொடரில் தொடர்ந்து போட்டியிடுகிறது.

இறுதியாக 1993 இல் Montreal Canadiens அணி Stanley கோப்பையை வென்ற கனடிய அணியாகும்.

Related posts

G20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை Mark Carney சந்திப்பு!

Lankathas Pathmanathan

Jamil Jivani தெரிவிக்கும் கருத்து கட்சியின் கருத்து அல்ல? – Pierre Poilievre

Lankathas Pathmanathan

அமெரிக்கா – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment