அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்த ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடாவுக்கு ஏற்படும் செலவு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
Golden Dome அமைப்பில் கனடா பங்கேற்பதற்கு $61 பில்லியன் செலவாகும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அண்மையில் அறிவித்திருந்தார்.
ஆனாலும் இதற்கான உண்மையான செலவு குறித்து தெரியவில்லை என கனடிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty தெரிவித்தார்.
கனடா அமெரிக்காவில் ஒரு நாடாக இணைய ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த ஏவுகணை பாதுகாப்பு கேடயம் கனடாவுக்கு மிகப்பெரிய செலவை ஏற்படுத்தும் என Donald Trump கூறியது குறிப்பிடத்தக்கது.
