November 19, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை இந்த குளிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில்  பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமாகவும் மழையாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் கனடாவின் சமீபத்திய தரவுகளின்படி இந்த எதிர்வு கூறல் வெளியானது.

மேற்கு, மத்திய கனடாவின் பெரிய பகுதிகளில் சராசரியை விட குறைவான பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

Yukon, Northwest Territories, Nunavut, Quebec ஆகிய பகுதிகளில் சராசரி அளவை விட அதிகமான பனி பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சராசரி நிலைகளில் பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.

பனிப்பொழிவு குறைவாக இருக்கும் என முன்னறிவிக்கப்பட்ட பகுதிகள் அதிக மழைக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Atlantic கனடா , Quebec மாகாணத்தின் சில பகுதிகள், வடக்கு Ontarioவின் சில பகுதிகள், Northwest பிரதேசங்களின் சில பகுதிகள், Nunavut ஆகிய இடங்களில் December, January, February முழுவதும் சராசரியை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Lankathas Pathmanathan

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு Conservative வேட்பாளர்!

Lankathas Pathmanathan

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

Leave a Comment