தேசியம்
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினராக தெரிவானார் பார்த்தி கந்தவேள்

Scarborough Southwest நகரசபை உறுப்பினராக பார்த்தி கந்தவேள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

Scarborough Southwest நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை (30) நடைபெற்றது.

இதில் அதிக வாக்குகளை பெற்று பார்த்தி கந்தவேள் வெற்றிபெற்றார்.

வெளியான உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் பிரகாரம் பார்த்தி கந்தவேள் 4,641 வாக்குகளை பெற்றுள்ளார்.

இது பதிவான மொத்த வாக்குகளில் 27.38 சதவீதமாகும்.

இந்த இடைத் தேர்தலில் சுமார் 4,374 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்.

கடந்த சனி (25), ஞாயிற்றுக்கிழமை (26) இந்த முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் தமிழரான பார்த்தி கந்தவேள் ஒருவராவார்.

பார்த்தி கந்தவேள், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் கல்வி சபை உறுப்பினராக வெற்றி பெற்றவராவார்.

இவர் கடந்த நகரசபை தேர்தலில் Scarborough Southwest தொகுதியின் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Gary Crawford, கடந்த July மாதம் பதவி விலகியிருந்தார்.

Scarborough-Guildwood தொகுதியின் மாகாணசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது   நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இந்த  மாகாணசபை இடைத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related posts

கனடா எதிர்கொள்ளும் மிகவும் தீவிரமான சூழ்நிலை: பிரதமர் விளக்கம்

Lankathas Pathmanathan

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடா-சீனா வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஆதரவு!

Lankathas Pathmanathan

Leave a Comment