September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடா – அமெரிக்கா போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதை போக்குவரத்து மீண்டும் திறக்கப்படுவதாக கனடிய அதிகாரிகள் புதன்கிழமை (22) மாலை அறிவித்தனர்.

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Rainbow பாலத்தில் வாகனம் வெடித்து சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாலத்தின் அமெரிக்க பக்கத்தில் புதன்கிழமை காலை 11:30 மணிக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்ற அனுமானத்தின் கீழ் கனடிய அரசாங்க அதிகாரிகள் செயல்பட்டனர்.

இதன் காரணமாக, பயங்கரவாத இலக்குகளில் தங்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகள் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இந்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அதிகாரிகள் Rainbow பாலம் உட்பட மூன்று Niagara எல்லைக் கடவைகளை மூடினர்.

எனினும், புதன் மாலை 5 மணிக்குப் பின்னர் Whirlpool பாலம், Peace பாலம், Queenston-Lewiston பாலம் ஆகியவை போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படுவதாக Ontario மாகாண காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

ஆனாலும் Rainbow பாலம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

ஆனாலும் Ontarioவில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என OPP ஒரு அறிக்கையில் தெரிவித்தது

Related posts

திருடப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்கப்பட்ட விசாரணையில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan

கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது: இளவரசர் Charles

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja

Leave a Comment