தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கோவிட் – 19 நெருக்கடிக் காலம் முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவி புரிவதற்குக் கனடிய அரசு உறுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார். உணவு வங்கிகளுக்கு 100 மில்லியன் டொலர் வழங்கப்படுமென நேற்று (வெள்ளிக் கிழமை) அறிவித்த அவர், வீடற்ற நிலையில் இருக்கும் தனி நபர்களுக்கு உதவியாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட 157 மில்லியன் டொலரும், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவியாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட 50 மில்லியன் டொலரும், தேவைப்படும் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

இந்தப் பணத்தில் 40 மில்லியன் டொலர், நாடெங்கும் உள்ள பெண்கள் ஷெல்ட்டர்களுக்கும், பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கான நிலையங்களுக்கும், 10 மில்லியன் டொலர் வன்முறையில் இருந்து தப்பிச் செல்லும் பூர்வ குடிப் பெண்களுக்கும், சிறுவர்களுக்குமான அவசர ஷெல்ட்டர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவைகளுக்கு ஏற்ப இட வசதியை வாடகைக்குப் பெற்றுக் கொள்வதற்கும், இடங்களை மேலும் பாதுகாப்பாக மாற்றுவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.

எதிர்வரும் 48 மணி நேரத்தில் பல மில்லியன் சுவாசக் கவசங்களின் தொகுதி யொன்று கனடாவை வந்தடையுமெனவும் பிரதமர் அறிவித்தார். சமஷ்டி அரசு மாகாணங்களுடன் இணைந்து அவற்றின் மருத்துவப் பொருட்களைத் தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு உதவியளிக்கிறது. இந்தப் பொருட்களை இயலுமான விரைவில் சேகரித்து, விநியோகம் செய்வதற்கு உதவியாகக் கனடிய அரசு சீனாவில் களஞ்சியம் ஒன்றை குத்தகைக்குப் பெற்றுள்ளது. இந்தப் பொருட்களை இங்கு கொண்டு வருவதற்குக் கனடிய சரக்கு விமான நிறுவனங்களையும், எயார் கனடாவையும் கனடிய அரசு எதிர்காலத்தில் பணிக்கு அமர்த்தவுள்ளது.

முன்னொரு போதும் ஏற்படாத நெருக்கடி நிலவும் இந்த வேளையில், கனடாவெங்கும் உள்ள சிறுவர்களின் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் பதிலளிக்கும் நோக்கத்துடன், சிறுவர்கள் அனுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கனடாவின் தலைமை மருத்துவர் தெரீசாராமுடன் (Theresa Tam) இணைந்து ஏப்ரல் 5 ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை வீடியோ மகாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்.

இதைப் போன்று, கனடிய விண் வெளி வீரர் ஜெறெமி ஹான்செனும் (Jeremey Hansen) சுய தனிமைப்படுத்தல், பாதுகாப்பாக இருத்தல் என்பன தொடர்பாகச் சிறுவர்களுடன் உரையாடுவதற்கு YouTube இல் நாளை நேரஞ்சல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்.

கோவிட் – 19 தொடர்பான நம்பகத் தன்மை மிக்கதும், சரியானதுமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கனடியர்கள் முற்பட்டுள்ளதாகப் பிரதமர் ஏற்றுக் கொண்டார். சூழ் நிலை குறித்த முழுமையான தேசிய மட்ட விபரத்தைத் தயாரித்துக் கனடியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குத் தேவையான புதிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குச் சமஷ்டி அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் தொடர்ந்து இணைந்து செயலாற்றும். கோவிட் – 19 தொடர்பான அனைத்து விபரங்களும், பிந்திய புள்ளி விபரங்களும் Canada.ca/Coronavirus இல் அல்லது Canada COVID – 19 செல்பேசிச் செயலியில் இருக்கின்றன.

Updated Emergency Measures by the Canadian Federal Government on April 4th

Prime Minister Justin Trudeau announced that the Canadian government remains committed to assist vulnerable populations throughout the COVID-19 crisis. Following yesterday’s (Friday) announcement of $100 Million to food banks, today (Saturday) he announced that the $157 million committed to assist individuals facing homelessness and $50 million to assist women and children facing domestic violence have now been allocated to communities in need.

Of this, $40 million has been designated for women’s shelters, and sexual assault centres, across the country, and $10 million for emergency shelters for Indigenous women and children fleeing violence. The funds will be made available towards renting new spaces to meet the needs, and making spaces more safer.

The Prime Minister also announced that Canada will be receiving a shipment of millions of masks in the next 48 hours. The federal government is working with provinces as well to transport their medical supplies as needed. The Canadian government has also leased a warehouse in China to help collect and distribute these items as quickly as possible, and going forward will be chartering flights through Canadian cargo jet companies and Air Canada to get the materials here.

To help address the questions and concerns that kids across Canada have during these unprecedented times, Prime Minister Justin Trudeau, along with Canada’s Chief Medical Officer, Dr. Theresa Tam, will be holding a videoconference on Sunday, April 5th, to address questions sent by kids. Similarly, Canadian astronaut Jeremey Hansen will also be live tomorrow on YouTube to talk to children about self-isolation and staying safe.

The Prime Minister acknowledged that Canadians of all ages are looking to get the most reliable and accurate information regarding COVID-19. The federal government will continue to work with provinces and territories on getting new information to have a complete and national picture that will be shared with Canadians. All information and latest statistics on COVID-19 can be found on Canada.ca/Coronavirus or the Canada COVID-19 mobile app.

Related posts

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை நோக்கி கனடா செல்லும்

Lankathas Pathmanathan

12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசிகள்: Health கனடா அங்கீகாரம்!

Gaya Raja

Leave a Comment