தேசியம்
செய்திகள்

இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது!

இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ontarioவின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams செவ்வாய்க்கிழமை மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டார். AstraZeneca தடுப்பூசியின் காரணமாக ஏற்படும் இரத்த உறைவு குறித்த முறைப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்கப்பட்டது என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Williams கூறினார். இந்த முடிவு ஏனைய தடுப்பூசிகளின் அதிகரித்த விநியோகத்தின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டது என Williams கூறினார்.

Ontarioவில் AstraZeneca தடுப்பூசி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல மருந்தகங்களில் வழங்கப்பட்டது. இந்த வாரம் முதல் Toronto பெரும்பாகம், Hamilton, Ottawa, Windsor-Essex பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தகங்கள், Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளை பெற ஆரம்பித்துள்ளன. Albertaவும் முதலாவது AstraZeneca தடுப்பூசியை இனிவரும் காலத்தில் வழங்காது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தல்

Lankathas Pathmanathan

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment