தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கனேடிய தீயணைப்பு படை உறுப்பினர் கொல்லப்பட்டார்.

Northwest பிரதேசங்களில் தொடரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாரிகள் ஒரு அறிக்கையில் இந்த மரணத்தை உறுதிப்படுத்தினர்.

பலியான தீயணைப்பு படையினரின் பெயர் விபரங்கள் எதையும் அரசாங்கம் வெளியிடவில்லை.

தற்போது 89 காட்டுத் தீகள் Northwest பிராந்தியத்தில் எரிந்து வருகின்றன.

அங்கு காட்டுத் தீயின் காரணமாக 8 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர், British Columbiaவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 19 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.

இவர் Devyn Gale என அவரது சகோதரனால் அடையாளம் காணப்பட்டார்.

Related posts

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

Lankathas Pathmanathan

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

Leave a Comment