தேசியம்
செய்திகள்

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் RCMP அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

Burnaby நகரில் கத்தியால் குத்தப்பட்டதில் RCMP அதிகாரி ஒருவர் இறந்துவிட்டதாக மாகாணத்தின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பலியான RCMP அதிகாரி பணியில் இருந்த பெண் அதிகாரி என அமைச்சர் Mike Farnworth சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) மாலை தெரிவித்தார்.

இது முற்றிலும் ஒரு சோகமான ஒரு சூழ்நிலை எனவும் அவர் கூறினார்.

பலியான RCMP அதிகாரி Constable Shaelyn Yang என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இவரது மரணம் குறித்த செய்தியால் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாக Burnaby நகர முதல்வர் Mike Hurley தெரிவித்தார்.

இந்த செய்தியால் வருத்தம் அடைவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

NDP தலைவர் Jagmeet Singh, Conservative தலைவர் Pierre Poilievre ஆகியோரும் இந்த சம்பவம் குறித்தும் வருத்தம் வெளியிட்டனர்.

Related posts

COVID தொற்றை எதிர்த்துப் போராட, 1.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் கனடா

Lankathas Pathmanathan

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மத்திய வங்கி ஏன் வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment